சிந்திக்கவும் சுயமாக சொந்த அபிபிராயங்களை உருவாக்கவும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் . படித்தவர் பாமரர் பேதமின்றி இந்த இரவல் சிந்தனை வியாதி நமது சமுகத்தில் வேரோடி போய்விட்டது. இந்த இழிநிலைக்கு எம்மை இட்டு சென்ற காரணிகளில் முதலாவது காரணியாக இருப்பது, எம்மீது அழுத்தமாக பதியப்பட்ட சமயம் சார்ந்த நம்பிக்கைகளாகும் , இரண்டாவது கலாசாரம் அல்லது அரசியல் போன்ற காரணிகளால் எம்மீது திணிக்கப்பட்ட கோட்பாடுகளாகும் .
எமது சுய சிந்தனை மேற்காணும் காரணிகளால் பறிபோய் விட்டது என்பது ஒரு வேதனைக்குரிய உண்மையாகும் .
அதனால்தான் நாம் எதைகண்டு பயப்படுகிறோமோ அதையே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறோம் , பயங்கரவாதிகளை நாம் ஆதரிப்பது அல்லது ரவுடிகளை ஆதரிப்பது அல்லது பணக்காரனை ஆதரிப்பது எல்லாமே இந்த வியாதியினால்தான் .
நமது கல்விமுறை கூட ஓரளவு பயத்தை காட்டி பாடமாகும் முறையை தான் பின்பற்றுகிறது, இதன்காரணமாக நாம் சிறந்த வேலைக்காரர்களை உருவாக்குகிறோம் ஆனால் சிறந்த சிந்தனை யாளர்களை யோ அல்லது சுயமாக சிருஷ்டி செய்யும் ஆற்றல் உள்ள கலைஞர்களை அல்லது கவிஞர்களை பெரிது உருவாக்க முடியாமல் போய்விட்டது .
இந்த கல்வி முறை எமது பயம் சார்ந்த சமய கோட்பாடுகளிருந்து உருவாகி இருக்கவேண்டும் , ஏனெனில் இரண்டுமே மனிதர்களை வெறும் robot களாக தான் தயாரித்து உள்ளது .
மனிதருக்கு உரிய சுயம் என்ற ஒன்றை நாம் ஏற்று கொள்வதே இல்லை , அது மட்டுமல்ல சுயம் உள்ளவனை எமக்கு பிடிப்பதும் இல்லை ,
கும்பல்லை கோவிந்தா போட்டு ஊரோடு ஒத்து போகும் ஒரு சராசரி முட்டாளை தான் எமக்கு பிடிக்கும் , அவனே சிறந்த அறிவாளி என்றும் கூட எண்ணுவோம் , ஊரோடு ஒத்துபோகும் கலைதான் சிறந்தது என்பதுதான் எமது கோட்பாடு ,
சரி நாம் சுயமாக சிந்திக்காவிடில் உனக்கென்ன கேடு என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம் ?
நமது சரித்திரம் ஏன் படுமோசமாக இருந்தது என்பதற்கு பதிலை நீங்கள் இப்போது தேட வேண்டும் ,
இனியாவது சுயமாக தேடுங்கள் , உங்களுக்காக இன்னொருவர் சிந்திக்கும் முட்டள்தனத்தில் இருந்து விடுதலை பெறுங்கள் , அதுதான் உண்மையான விடுதலை
No comments:
Post a Comment