Wednesday, April 16, 2014

ஒரு அறிவியல் விழிப்புணர்வை நோக்கி

இலங்கை பகுத்தறிவியல் கழகமானது நமது சமுகத்தில்  ஒரு அறிவியல்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாகவே ஆரம்பிக்க பட்டுள்ளது .

காலத்திற்கு காலம் எமது அறிவியல் கோட்பாடுகள் மாறுதலை நோக்கியே வளர்ந்திருக்கிறது.

புதிய விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபரிமிதமான எல்லைகளை தொட்டு இருக்கிறது.

அவற்றை பற்றிய போதிய விழிப்புணர்வு எமக்கு தேவை .
நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு உரிய வாய்ப்புக்கள் எமக்கு போதிய அளவு இருக்கிறதா ?
உண்மையில் போதிய அளவு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நாம் சமுக விஞ்ஞான அல்லது மனித குல பரிணாம வளர்ச்சி பற்றிய புரிந்துணர்வை பெற்றிருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

நாம் எதைபற்றி எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்றாவது எமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லவா ?
மனிதசமுதாயம் தனது கேள்விகளுக்கு எல்லாம் விஞ்ஞான ரீதியான பதில்களை பெறாது ,
வெறும் சமயம் அல்லது பாரம்பரிய பழக்க வழக்கம் சார்ந்த பதில்களோடு திருப்தி அடைந்து விடுமானால் ,
அந்த சமுகம் வளர்ச்சி பாதையில் செல்லவில்லை என்றுதான் அர்த்தம் .

எதையும் பகுத்தறிவு கண்கொண்டு அணுகவேண்டும் ,

பகுத்தறிவு பண்பு இல்லாத சமுதாயம் தனி மனிதர்களின் சுயமரியாதையை பெரிதும் மதிப்பதில்லை .

பகுத்தறிவு என்ற சொற்பதம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பலவிதமான அர்த்தங்களை வெளிகாட்டுகிறது .

மனிதசமுதாயத்தின் உயரிய விழுமியங்களுக்கு உரிய மதிப்பு வழங்க வேண்டும்,

ஒவ்வொருவரின் சுய மரியாதை பேணப்படவேண்டும்.
சுயமரியாதை பண்புகள் மனித குலத்திற்கு இன்றியமையாதவை .

மனிதர்களின் சுயமரியாதையை மதிக்காத மதமோ கலாச்சாரமோ நாகரீகமோ மனித மேம்பாட்டுக்கு துணை புரியாது,

நாம் வாழும் இந்த உலகம் மனிதர்களாலும் இதர ஜீவராசிகளாலும் மரம்செடிகொடி  போன்றவைகாளாலும் வளம் பெற்று இன்றைய உன்னத நிலையை எட்டி உள்ளது .

இதுதான் விஞ்ஞான பூர்வமான உண்மை .

மூட நம்பிக்கைகளால் உலகம் வளரவில்லை .

அறிவுதான் உலகை முன்னேற்ற பாதையில் செலுத்தி உள்ளது,
பௌதிக இரசாயன மருத்துவ உண்மைகளை போன்றே மனித வாழ்வு தொடர்புடைய சமுக கோட்பாடுகளும்  மிகவும் விஞ்ஞான பூர்வமானவையாகும் .

அன்பு செலுத்தினால் மட்டுமே சமுகம் மகிழ்ச்சியாக இருக்கும் .

தனிமனிதர்களின் சுயமரியாதையை பாதுகாக்கும் பண்பு மேலும் மேலும் வளரவேண்டும்

நாம் எதை எதிர்க்கிறோம் என்று பார்த்தால் உண்மையில் நாம் எதையும் எதிர்க்கவே இல்லை  என்பதுதான் எமது பதிலாக இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை போன்ற விஞ்ஞானம் சாரத நம்பிக்கை கோட்பாடுகளை நாம் எதிர்க்க வில்லை .

அவை மனிதர்களின் தனிப்பட்ட விருப்பு என்றே கருதுகிறோம்.

எவரும் தமது தனிப்பட்ட கொள்கை கோட்பாடுகளை வைத்திருப்பது  அவர்களின் உன்னதமான சுதந்திரம்.

சமயங்கள்,கடவுள்கள்,கலாசாரம் பழக்கவழக்கம் போன்ற  அல்லது வேறு எதாவது காரணிகளால் தனிமனிதர்களின் செயல் சமுகத்தை பாதிக்கும் நோக்கில் இருக்கும் பொழுது அவர்களுக்கு அவற்றை விளக்கும் நல்காரியத்தை அறிவியலாளர்கள்  செய்யவேண்டியது அவசியமாகும் .

சுருக்கமாக கூறுமிடத்து வாழ்வில் அறிவியல் நோக்கிலான பார்வை நமக்கு தேவை என்ற நல்ல நோக்கத்திற்காக மட்டுமே எமது பகுத்தறிவியல் கழகம்  தொடங்கப்பட்டு உள்ளது,

No comments:

Post a Comment