Wednesday, April 30, 2014

பழமையான மயக்கம் ? பழமையை போற்றுதும் பழமையே தெய்வம் பழமையே புனிதம் !

பழமையான தத்துவங்கள் பழமையான  எல்லாமே மிகவும்
புனிதமானவை போற்றுதற்கு உரியவை .
ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது

சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும் ,
இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்.

இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும் .

சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம் பெருசுகள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சனாதனம் என்று இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள்?

கணவன் இறந்தால் அவனது எரியும் சவத்தோடு மனைவியும் சேர்ந்து எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது சனாதன தர்மம், அப்படி எரிந்து சாம்பலானவள் சதிமாதா என்று போற்ற படுவாள் .

ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு அந்தஸ்தில் வைக்கப்படுவதும் சந்தன தர்மம் அதாவது பிராமணன் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவனாம்.தாழ்ந்த ஜாதிக்காரன் காலில் இருந்து பிறந்தவனாம் , இது ஒரு சனாதன தர்மம் .இந்த கண்றாவி கோட்பாடுகளையும் நமது தலையில காவுகிறோம் .

இரண்டாம் நூறாண்டு வரை இந்த பிராமணர்கள் ஆடு மாடு போன்ற சகல விதமான இறைச்சியும் புசித்தவர்கள் பின்பு சமணர்களை பார்த்து கொல்லாமையை கடைப்பிடிப்பதாக பாவனை பண்ணி தாவர பட்சினியானார்கள் .

Tuesday, April 29, 2014

Desensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடிக்கும் ஊடகங்கள்

De Sensitization என்பதற்கு சரியான தமிழ் சொல் எனக்கு தெரியவில்லை ,
ஓரளவுக்கு கூச்சம் தெளிதல் அல்லது குளிர் விட்டுப்போச்சு என்று பேச்சுவழக்கில் குறிப்படுவது போல என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம் என்றெண்ணுகிறேன். உதாரணமாக ஒரு வன்முறை காட்சியை மீண்டும் மீண்டும் டீவியிலோ திரைப்படத்திலோ பார்த்துகொண்டிருந்தால் அதில் வரும் சம்பவங்கள் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சம்பவங்களாகிவிடும், சந்தர்ப் சூழ்நிலை மாறும்போது நாமும் அப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடியவர்களாக மாறிவிடுகிறோம் . ஏனெனில் சதா நாம் பார்க்கும் காட்சிகள் நமது நுண் உணர்வுகளை மழுங்க அடித்து விடுகின்றன . அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் காட்சிகளால் நாம் எம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டு விடுகிறோம் ,
 அடிக்கடி வன்முறை படங்களை பார்த்துவிட்டு சிறுவர்கள் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவது அடிகடி நடைபெறுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது ,

Sunday, April 27, 2014

உங்களுக்கு கடவுளை காட்டுகிறேன் என்று ஏமாற்றும் கிரிமினல்களிடம் சிக்கியது போதும் !

அனேகமாக எல்லா சாமியார்களும் சமய வாதிகளும் உபதேசிகளும் குருமார்களும் சமயம் மாற்றும் பிரசாரகர்களும் அள்ளி வீசும் கருத்துக்கள் எல்லாமே நியூ ஏஜ் தத்துவங்கள் என்று கூறப்படும் விடயங்களும் சுய முன்னேற்ற புத்தகங்களில் இருந்து பெறப்படும் உளவியல் மற்றும் பிரபஞ்ச பற்றிய கருத்துக்களே ஆகும் ,அவை நல்ல கருத்துக்களே , யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்று பேசாமல் இருந்து விடலாம் தான் ,ஆனால் இந்த கூட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஆத்மீக உபதேசிகள் எல்லாருமே நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் தங்கள் சொந்த கருத்துக்கள் அல்லது அனுபவங்கள் போல பாவனை பண்ணி நடித்து விட்டு சிஷ்யர்களை நிரந்தர கத்துக்குட்டி அடிமைகளாக அல்லவா வைத்திருக்கிறார்கள்? 

அத்தனை முடிச்சவிக்கிகளும் பெரும் பெரும் தத்துவங்களை சொல்லி கேட்போரை மயக்கி விட்டு இறுதியில் அவர்களின் பணத்தை எப்படியாவது பிடுங்கி விடுவார்கள் எனக்கு தெரிந்த அளவில் இன்று பிரபலமாக இருக்கும் அத்தனை ஆள்பிடி காரரும் இப்படித்தான் நித்தியானந்தா என்பவர் நன்றாக பேசுவார், எல்லாம் ஓஷோ மற்றும் தீபக் சோப்ரா அல்லது வைன் டயர் மற்றும் நோர்மன் விஸ்டன் போன்றவர்களின் உபயம் அடுத்தது அந்த ஜாக்கி வாசுதேவ் என்ற சாமியார், இவர் மனைவியை கொன்றதாக வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்க கடையை வெற்றி கரமாக திறந்து விட்டுள்ளார், பேசுவதில் ஒன்று கூட ஒரிஜினல் இல்லை , எல்லாம் ஓஷோ வின் second Hand matter தான் ,இவருக்கு ஒரு மகளும் பல பெண் சிநேகிதகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டு,

Friday, April 25, 2014

நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதல்ல முக்கியம் . நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்க படக்கூடிய மனிதராக இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

பரஸ்பரம் அன்பான உறவுகள் மிகவும் இனிமையானவையாகும் , நாம்
அனுபவிக்கும் உறவுகள் பெரும்பாலும் பிறரை ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க பயன்படும் தந்திரமாகவே கருதுகிறோம் .

பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவானாலும் அல்லது காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவாக இருந்தாலும் அவை பெருதும் ஒரு சுய நலம் அல்லது (possessiveness) எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான பொருள் போன்ற ஒரு உணர்வின் அடிப்படையில் தோன்றும் காரணமாகவே இருக்கிறது,
இப்படி அன்பின் அடிப்படையே புரிந்து கொள்ளப்படாமல் வெறும் எனது பொருள் போன்ற உணர்வின் அடிப்படையில் உள்ள உறவுகள் உண்மையில் உறவுகளே அல்ல . நம்மில் பெரும்பாலோரின் உறவுகள் இப்படிதான் அமைந்து விடுகின்றது ,
நாம் விரும்பும் பொருள் எமக்கு கிடைக்காவிடின் நாம் ஆத்திரப்பட்டு அதை அழித்துவிடும் அளவுக்கு சென்று விடும் கொடுமை எல்லாம் இந்த possessiveness எனப்படும் சுயநலதினால் தான் உருவாகிறது , விலகிப்போகும் காதலிக்கு தீங்கு செய்வது , மகன் வாழ்வு கெட்டாலும் பரவாயில்லை போட்டியாக உள்ள மருமகளுக்கு பாடம் படிப்பிப்பது போன்று ஏராளமான உதாரணங்களை கூற முடியும் ,
குடும்ப அமைப்பு முறை இறுக்கமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆசிய ஆபிரிகக் நாடுகளில்தான் மனித உறவு முறைகள் எல்லாம் மிகவும் திரிபடைந்து மாசுபட்டு உள்ளது , குடும்ப பாரம்பரியம் என்ற பெயரால் எத்தனை கொடுமைகள்? இந்த குடும்ப உறவு பெருமையை பற்றி அதிகமாக பேசும் நாடுகளில்தான் கொடுமைகள் இன்னும் குறையவில்லை !

Wednesday, April 23, 2014

உண்மையை அறியவேண்டும் என்றால் ஆறுதல் வார்த்தைகளை நம்பாதீர் ! அவை தற்காலிக ஆஸ்ப்ரின் மாத்திரைகளே

அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அறிவாளிகள் அல்லது ஞானிகள்
என்று சொல்லப்படுபவர்களின் பட்டியலை எடுத்து கொண்டால் உண்மையில் அது ஒரு சிறிய பட்டியலாகதான் இருக்கும்,
போலி வரலாறுகள் தாராளமாக உண்டு ,   கவனத்தில் கொள்ள கூடிய அளவு முத்திரை பதித்தவர்கள் சிலரே,
அவர்களின் பாதைகள் விதம் விதமாக அமைந்துள்ளன,
எமக்கு ஏற்புடையதாக இல்லாதவிடத்தும் சிலரின் தேடல்களின் ஒரு நேர்மை இருந்தது உண்மையே.
யு.ஜி,கிருஷ்ணமூர்த்தி, ஜே,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எமது கவனத்தை சற்று கவர்ந்து உள்ளார்கள்
மனிதனின் பிறப்பு இறப்பு கடவுள் பிரபஞ்சம் போன்ற பெரிய பெரிய கேள்விகளுக்கு கொஞ்சமாவது உண்மையான பதிலை தேட வேண்டும் என்ற அவாவில் மிகவும் விஞ்ஞான பூர்வமாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்தவராவர்.
உண்மையில் அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் இதுதான் பதில் என்று கூறவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .
 கேள்விகளையே மீண்டும்  பதில்களாக அல்லது பதில்களையே மீண்டும் கேள்விகளாக மாற்றி நம்மை குழப்பிவிடும் கைங்கரியத்தையே செய்துள்ளனர் .
உண்மையில் ஏதாவது ஒரு பதிலை தேடும் எமது கேள்விகள் பெரும்பாலும் சரியான பதில் என்பலும் பார்க்க எமக்கு உகந்ததான பதிலையே எதிர்பார்த்து கேட்கப்படும் கேள்விகளாகும் ,
போலி பதில்கள் தற்காலிக ஆத்மீக வார்த்தைகள் போன்ற இனிப்புக்கள் எதுவும் கிரிஷ்ணமுர்த்திகளிடம் கிடையாது ,
கேள்விகளோடு வருபவர்களுக்கு இதோ நான் பதில் தர காத்திருக்கிறேன் என்று கடை விரித்து காத்திருக்கும் கள்ள சாமிகள் ஆசாமிகள் நிறைந்திருக்கும் உலகில்,
எந்த விதமான தாலாட்டு மருந்துகளும் கிடையாது,
மாறாக கேள்வி கேட்பவரை மேலும் பல கேள்விகள் கேட்க தூண்டும் படியான குழப்ப வேலைகளையே கிரிஷ்ணமுர்த்திகள் செய்தனர் . ஓஷோ கூட இதே போல தூக்கத்தில் இருப்பவரை தட்டி எழுப்பிவிடும் வேலையைத்தான் செய்தார் ,

Tuesday, April 22, 2014

எமக்கு எது வேண்டும் ? நாம் வேண்டுவதை அடைவது எப்படி ?

நமது மனம் எவ்வளவு தூரம் எமக்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை பற்றி நாம் மிகவும் சிரத்தையோடு ஆராய வேண்டி இருக்கிறது . எமது உடல் வளர்ச்சி ஆரோக்கியம் மட்டும் அல்லாது எமது தோற்ற பொலிவு கூட எமது மனத்தை பொறுத்துதான் அமைகிறது என்பது மிகவும் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும். எமக்கு வாழ்வில் சம்பவிக்கும் வெற்றி தோல்வி மகிழ்ச்சி துக்கம் போன்ற எல்லாமே எமது மனத்தின் தன்மையை பொறுத்தே அமைகிறது.
இந்த உண்மைகள் தற்போது ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இன்னும் இதில் உள்ள மர்மங்கள் நமக்கு சரியாக புரியவில்லை என்றுதான் எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் எமது மனம் என்ற கருவியை நாம் சரியாக உபயோகிக்க தெரிந்திருந்தால் எமக்கு துன்பங்களே இருக்காது நோய்களும் கூட இருக்காது. நல்லதையே நினைப்பவருக்கு கூட பல தீமைகள் நடப்பது ஏன்? நாம் ஆழமாக சிந்திக்க வேண்டி உள்ளோம். மனம் என்ற கருவியை நாம் சரியான முறையில் உபயோகிக்க பழக வேண்டும். இருட்டிலே ஒன்றுமே தெரியாமல் கருவியை தவறான திசைக்கு திருப்புகிறோம், அநேகமானவர்க்கு இந்த தவறுதான் நடக்கிறது.

உண்மையில் இது ஒரு formula இது ஒரு சூத்திரம். ஆச்சரியகரமாக இந்த சூத்திரம் பலருக்கும் சரியாக தெரிவதில்லை. இது கொள்கை அளவில் விளங்குவது இலகுதான் ஆனால் நடை முறையில் பழக்கமாக கொண்டு வருவது மிகவும் கடினம். ஏனெனில் எம்மில் ஆழமாக ஊறி விட்ட தவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவான காரியமல்ல.Un learning is not easy as Learning   

ஒரிஜினல் கேள்விகளும் இல்லை ஒரிஜினல் பதில்களும் இல்லை !

கடவுள் இருக்கிறாரா அல்லது இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குள்
செல்வது எந்த வகையிலும் ஈசியான சமாசாரம் அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களும் மறுப்பாளர்களும் தங்களுக்கு தெரிந்ததாக தாங்கள் எண்ணிக்கொண்டு இருக்கும் கருத்துக்களை மிக இலகுவில் அள்ளி வீசிவிடுவர்.
இந்த பதில்கள் எல்லாமே ஒரு இரவல் பதில்கள்தான் என்பது அடியேனின் தாழ்மையான அல்லது மிகவும் கர்வமான அபிப்பிராயமாகும் .
யாரோ சொல்லிகொடுத்த அல்லது எங்கோ படித்த கருத்துக்களை தங்கள் சுய கருத்துக்களாக நம்பி கிளிப்பிள்ளை மாதிரி ஒப்படைத்து திருப்தி அடைவது காலா காலமாக நடக்கிறது .
உண்மை என்ன ?
அது என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்பதைவிட.
 அது என்று எதை நாம் நினைகின்றோம் என்பது மிகவும் முக்கியமானது , எமது கேள்வி எப்போது ஒரு ஒரிஜினல் கேள்வியாக இருக்கிறதோ அப்போதே உண்மையான பதிலை அறிவது இலகு வாகிவிடும் . அது இருக்கிறதா இல்லையா என்பதை விட அது என்று எதை நாம் நினைக்கிறோம் என்பது முக்கியம் !   

Monday, April 21, 2014

ஊரோடு ஒத்து போகும் ஒரு சராசரி முட்டாளை தான் எமக்கு பிடிக்கும்

ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் சுயமாக
சிந்திக்கவும் சுயமாக சொந்த அபிபிராயங்களை உருவாக்கவும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் . படித்தவர் பாமரர் பேதமின்றி  இந்த இரவல் சிந்தனை வியாதி நமது சமுகத்தில் வேரோடி போய்விட்டது. இந்த இழிநிலைக்கு எம்மை இட்டு சென்ற காரணிகளில் முதலாவது காரணியாக இருப்பது, எம்மீது அழுத்தமாக பதியப்பட்ட சமயம் சார்ந்த நம்பிக்கைகளாகும் , இரண்டாவது கலாசாரம் அல்லது அரசியல் போன்ற காரணிகளால் எம்மீது திணிக்கப்பட்ட கோட்பாடுகளாகும் .
எமது சுய சிந்தனை  மேற்காணும் காரணிகளால் பறிபோய் விட்டது என்பது ஒரு வேதனைக்குரிய உண்மையாகும் .
அதனால்தான் நாம் எதைகண்டு பயப்படுகிறோமோ அதையே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறோம் , பயங்கரவாதிகளை நாம் ஆதரிப்பது அல்லது ரவுடிகளை  ஆதரிப்பது அல்லது பணக்காரனை ஆதரிப்பது எல்லாமே இந்த வியாதியினால்தான் .
நமது கல்விமுறை கூட ஓரளவு பயத்தை காட்டி பாடமாகும் முறையை தான் பின்பற்றுகிறது, இதன்காரணமாக நாம் சிறந்த வேலைக்காரர்களை உருவாக்குகிறோம் ஆனால் சிறந்த சிந்தனை யாளர்களை யோ அல்லது சுயமாக சிருஷ்டி செய்யும் ஆற்றல் உள்ள கலைஞர்களை அல்லது கவிஞர்களை பெரிது உருவாக்க முடியாமல் போய்விட்டது .
இந்த கல்வி முறை எமது பயம் சார்ந்த சமய கோட்பாடுகளிருந்து உருவாகி இருக்கவேண்டும் , ஏனெனில் இரண்டுமே மனிதர்களை வெறும் robot களாக தான் தயாரித்து உள்ளது .
மனிதருக்கு உரிய சுயம் என்ற ஒன்றை நாம் ஏற்று கொள்வதே இல்லை , அது மட்டுமல்ல சுயம் உள்ளவனை எமக்கு பிடிப்பதும் இல்லை ,
கும்பல்லை கோவிந்தா போட்டு ஊரோடு ஒத்து போகும் ஒரு சராசரி முட்டாளை தான் எமக்கு பிடிக்கும் , அவனே சிறந்த அறிவாளி என்றும் கூட எண்ணுவோம் , ஊரோடு ஒத்துபோகும் கலைதான் சிறந்தது என்பதுதான் எமது கோட்பாடு ,
சரி நாம் சுயமாக சிந்திக்காவிடில் உனக்கென்ன கேடு என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம் ? 
நமது  சரித்திரம் ஏன் படுமோசமாக இருந்தது என்பதற்கு பதிலை நீங்கள் இப்போது தேட வேண்டும் ,
இனியாவது சுயமாக தேடுங்கள் , உங்களுக்காக இன்னொருவர் சிந்திக்கும் முட்டள்தனத்தில் இருந்து விடுதலை பெறுங்கள் , அதுதான் உண்மையான  விடுதலை

Sunday, April 20, 2014

விஞ்ஞானத்தை விடுதலை செய்யுங்கள் !

True sign of intelligence is not knowledge but imagination. ஆத்மீக போர்வையில் இருக்கும் அறியாமை அல்லது போலியான சாமியார்களை / மனிதர்களை பற்றி எல்லாம் தற்போது அநேகருக்கு தெரிந்திருக்கிறது.
மனிதகுலத்தை எப்படியாவது இருட்டில் வைத்திருக்க விரும்பும் இந்த வியாபாரிகளை பற்றி எல்லாம் எழுதி எழுதி எனக்கு சற்று சலிப்பு ஏற்பட்டுவிட்டது .
எவ்வளவுதான் எழுதினாலும் பேசினாலும் நித்திரையை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக இருப்பது மிகபெரும் அறியாமைதான்.
அவர்களை விட்டுவிடுவோம். இந்த பகுத்தறிவாளர்கள் என்று பெருதும் கருதப்படுபவர்கள் தங்களை அறியாமலேயே வேறு ஒரு இருட்டில் இருப்பதாகத்தான் எனெக்கு எண்ணத்தோன்றுகிறது .
குறிப்பாக தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணை கண்டத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்களின் கருத்துக்கள் பலவும் மிகவும் காலம் கடந்த கோட்பாடுகளாகும்.
ஏனெனில் இவர்களால் இடித்துரைக்க படும் மூட நம்பிக்கைகள் பல தடவைகளில் இவர்களுக்கு புரியாத அல்லது இன்னும் அறுதி இட்டு கூற முடியாத விஞ்ஞான உண்மைகளாக இருக்கிறது.
எது மூட நம்பிக்கை என்று விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கு ஜாதியும் சமயமும் பெரும் தடையாக இருக்கிறது .

மேல்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சமயத்தை ஒரு சாதனமாக  பார்பனர்கள் பயன்படுத்தும் காரணத்தால் சமய கோட்பாடுகள் எப்போதும் உண்மையை மனிதன் கண்டறிவதற்கு தடையாகவே இருந்திருக்கின்றன.

Saturday, April 19, 2014

நாலு பேர் கூறும் அபிப்பிராயங்கள் போன்ற கலர் கண்ணாடிகள் மூலம் இந்த உலகத்தை பார்க்கிறோம் .

There are in fact two things, science and opinion; the former begets knowledge, the latter ignorance.”
― Hippocrates
 I never approve or disapprove of anything now !  Is is an absurd  attitude to take  towards LIFE . Oscar Wild

ஒரு  அனுபவத்தை 
அடைய தொடங்கும் முன்பே அது பற்றி அளவுக்கு
அதிகமாக  அபிப்பிராயங்களை  உருவாக்கி கொள்ளும்  பழக்கம் நம்மில்  
ஓரளவு இருக்கிறது,
இது  பாலகாண்டம் ஆரம்பிக்கையிலேயே  சமாதி காண்டத்தை  வாசிப்பது போன்றது,
இறுதி அத்தியாயத்தை முதலில் படித்து விட்டால் பின்பு  ஆரம்பத்தில் இருந்தே படிக்க வேண்டிய  அவசியம்  அவ்வளவாக இருப்பதில்லை ,
இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது,
இங்கே முடிவுரையாக வருவது எமது  அதீதமான அபிப்பிராங்களும் அதன் காரணமாக நாம்   கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும்தான்.
முதலிலேயே ஒன்றை தெரிந்து கொள்வோம் , வாழ்க்கை என்பது  ஒரு process அதாவது  அது ஒரு இயக்கம் , இன்னும் சரியாக சொல்லப்போனால் ஒவ்வொரு கணமும்  வாழ்வானது தன்னை தானே சிரிஷ்டித்துகொண்டு இருக்கிறது,
அதன் சிருஷ்டிக்கு  ஆதார விதையாக இருப்பது எமது மனதில் சதா   எழுந்த வண்ணம் உள்ள எண்ணங்களே ,
சிருஷ்டிக்குரிய  எண்ணங்கள் உருவான அடுத்த கணமே அந்த சிருஷ்டியின்  விளைவாக வரவேண்டிய  இறுதி  பயன் பற்றிய எமது  அபிப்பிராயங்கள்  அந்த சிருஷ்டியின் நோக்கத்தை  சிறுமை படுத்தி விடுகிறது.
அதாவது  ஆரம்பத்தில்  எதிர்பார்த்த  விளைவை இறுதியில்  அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது, அபிப்பிராயங்கள் தீர்மானங்களும் உண்மையில் இரண்டு வேறு பட்ட விடயம்தான் , ஆனால் பல சமயங்களில் அவற்றிக்கு இடையே உள்ள இடைவெளி அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை .
மேலோட்டமான அபிப்பிராயங்கள்  காலப்போக்கில்  எமது குணாதிசயங்களை பொறுத்து அவை முடிவான தீர்மானங்கள் ஆகிவிடுவதுண்டு ,
அவை வெறும் அபிப்பிராயங்களாக இருக்கும் வரைக்கும் பெரிதாக ஒரு தாக்கத்தை அன்றாட வாழ்வில் உண்டாக்காது , அந்த அபிப்பிராயங்கள் ஒரு அழுத்தம் பெற்று ஒரு முடிவான அபிப்பிராயங்களாகி விடும் பொழுது அவை ஒரு வலிமையான உணர்ச்சியாக அல்லது சக்தியாக மாறிவிடுகிறது ,
பெரும் பாலும் எதற்கெடுத்தாலும்  அபிப்பிராயம் மேற்கொள்வது  எமது உலகத்தை  சின்னஞ்சிறிதாக்கி விடும்,

Friday, April 18, 2014

நீங்கள் ஏற்கனவே அறிந்த உண்மைகளை எல்லாம் நம்புகிறீர்கள் !

அடடா எனக்கு எல்லாம் தெரிந்து விட்டதே ? இனி புதிதாக தெரிவதற்கு என்ன இருக்கிறது ?  எனக்கு எல்லாம் தெரியும் !
எனது  மதத்திற்கு எல்லாம் தெரியும் .
எனது குருவுக்கு எல்லாம் தெரியும் ,
எனது கல்விக்கு எல்லாம் தெரியும் ,
எனது கலாச்சாரத்திற்கு எல்லாம் தெரியும் ,
இப்படியாக நான் சார்ந்துள்ள நம்பிக்கை கோட்பாடுகளுக்கு எல்லாம் தெரியும் ,
இனி புதிதாக ஒரு விடயத்தையும் நான் அறிய வேண்டியதில்லை ,
 மேற்கூறிய வாசகங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நீங்கள் சிலவேளைகளில் புரிந்து கொள்வீர்கள் , ஏற்றுகொள்ளவும் கூடும் ,
இல்லை இல்லை நான் எப்போதும் புதிதாக எதையாவது கற்று அறிந்து கொள்ளவே விரும்புகிறேன் என்று நீங்கள் சிலவேளை சொல்ல கூடும்,
இந்த இடத்தில உங்களின் கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் ,

நாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது !

இப்பிரபஞ்சம் உங்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அளித்துள்ளது.
நமது வாழ்வு ஆனந்தம் உள்ளதாக அமைய நாம்  எப்படி இந்த பிரபஞ்சத்தை அணுக வேண்டும் ?
வாழ்வை செதுக்கும் உளி போன்ற கருவி எம்மிடம்தான் இருக்கிறது .

பிரபஞ்சம் எமக்களித்த அந்த கருவிகளை எப்படி உபயோகிப்பது அல்லது பயன் படுத்துவது என்பது எமக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும் .

இல்லாவிடில் அந்த கருவியால் உங்களுக்கு எந்தவிதமான பயன்பாடும் இல்லாது போய்விடும் .
அது மட்டுமல்ல மிகவும் வேண்டத்தகாத விளைவுகளும்கூட ஏற்பட்டுவிடும்.
எமக்கு வாய்க்கப்பெற்ற கருவிகள் பல.
எமது உடல் மற்றும் ஐம்புலன்கள் போன்றவை எமது தலையாய கருவிகள் ஆகும் .
இது போன்ற வெளி கருவிகளை விட மனம் அறிவு உணர்சிகள் போன்றவை மிகவும் நுட்பமான கருவிகளாகும் .

நமது மனம் அறிவு அல்லது உணர்சிகள் போன்றவை எவ்வளவு பெறுமதியான சக்தி மிகுந்த உபகரணங்கள் என்பது எமக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது என்று நம்புவோமாக.
எமது அதி உன்னதமான முக்கியமான கருவிகளான மனம் உணர்சிகள் அல்லது உணர்வுகள் எல்லாம் எவ்வளவு தூரம் எமது வாழ்வை தீர்மானிக்கின்றன என்பது பற்றி எமக்கு தெளிவான புரிதல் உண்டா என்ற கேள்வியை கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது,

ஏனெனில் , நாம் விரும்பியவாறு எமது வாழ்வு அமைந்துள்ளதா ?
எமக்கு விருப்பமான விடயங்கள் அல்லது பொருட்கள் எல்லாம் எமக்கு கிடைத்துள்ளதா ?
எமது அதி அற்புதமான கருவிகள் எமக்கு விருப்பமான வாழ்வை அல்லது பொருட்களை தந்திருகிறதா ?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம் என்று மிகவும் மகிழ்ச்சியாக எம்மால் பதில் கூற முடிந்தால் . எமது கருவிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி  வாழ்கிறோம் என்று அர்த்தமாகும் .

இல்லை எமக்கு திருப்தி இல்லை என்ற நிலைக்கு நாம் வந்தோமானால் எங்கோ எதோ  ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்.

அது என்ன தவறாக இருக்க முடியும் ?

Wednesday, April 16, 2014

ஒரு அறிவியல் விழிப்புணர்வை நோக்கி

இலங்கை பகுத்தறிவியல் கழகமானது நமது சமுகத்தில்  ஒரு அறிவியல்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாகவே ஆரம்பிக்க பட்டுள்ளது .

காலத்திற்கு காலம் எமது அறிவியல் கோட்பாடுகள் மாறுதலை நோக்கியே வளர்ந்திருக்கிறது.

புதிய விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபரிமிதமான எல்லைகளை தொட்டு இருக்கிறது.

அவற்றை பற்றிய போதிய விழிப்புணர்வு எமக்கு தேவை .
நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு உரிய வாய்ப்புக்கள் எமக்கு போதிய அளவு இருக்கிறதா ?
உண்மையில் போதிய அளவு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நாம் சமுக விஞ்ஞான அல்லது மனித குல பரிணாம வளர்ச்சி பற்றிய புரிந்துணர்வை பெற்றிருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

நாம் எதைபற்றி எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்றாவது எமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லவா ?

நமது தாகம் தீர நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்

சுயமரியாதை, பகுத்தறிவு, மனிதாபிமானம்,விஞ்ஞான பூர்வமானமான அணுகுமுறை ஆகியவையே இன்றைய தேவையாகும்

நம்மவர் மத்தியில் பகுத்தறிவு கருத்துக்கள் சரியாக விளங்கி கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறோம் .
பகுத்தறிவு என்றால் வெறுமனே கடவுள் மறுப்பு என்பதாக அர்த்தப்படுத்தி கொள்கிறார்கள்.
பலரும் கடவுள் என்று இங்கே குறிப்பிடுவது சமயங்கள் சார்ந்த நம்பிக்கை கோட்பாடுகளைதான்.
நாம் உண்மையில் அந்த பக்கத்திற்கே போகவிரும்பவில்லை .
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு என்ற பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளே நமக்கு போதுமானவை என்றெண்ணுகிறோம்.
அது உண்மையில் ஒருவரின் தனி மனித சுதந்திரம் .
அதை பிறரின் மீது திணிப்பதை நாம் ஏற்று கொள்ள முடியாது.
அதுவே சரியான அணுகு முறையாகும் என்று நம்புகிறோம் .
மனித சமுதாயத்தின் நம்பிக்கை கோட்பாடுகள் காலகாலமாக மாறிக்கொண்டே வந்திருக்கிறது,
ஒரு தனி மனிதனின் சுதந்திர சிந்தனைக்கு கடிவாளம் போடும் சமயம் சார்ந்த கோட்பாடுகள் அவனின் பரிணாம வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவி செய்யாது என்பதே சரியான பகுத்தறிவு கோட்பாடு என்று கருதுகிறோம். 

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சுயமரியாதை இருக்கிறது , 

பலதடவைகளில் பலருக்கும் சுயமரியாதை என்பதன் சரியான அர்த்தம் விளங்குவதில்லை.
சமுகத்தின் கட்டுப்பாடுகள் ஒரு தனிமனிதனை சுயமரியாதையை அங்கீகரிக்க வேண்டும் .
தனிமனிதனின் சுயசிந்தனையை என்ன காரணம் கொண்டும் மழுங்கடிக்க கூடாது,

உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது ஆனால் அது உண்மையல்ல ! கனவை கலைத்த கலிலியோ !

J.Krishnamurthi : One of our greatest difficulties is that we do not like to be disturbed, especially when we are a people steeped in tradition, in the easy ways of life, and with a culture that has merely become repetitive. Perhaps you have noticed that we put up a great deal of resistance to anything that is new. We do not want to be disturbed; and if we are disturbed, we soon adjust ourselves to a new pattern and again settle down, only to be again shaken, disturbed and troubled. So we go on through life, always being driven from a pattern into which we have settled down. The mind objects most violently and defensively to any suggestion of a change from within. அறிஞர்களை அல்லது வழிகாட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் .
நமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்மை ஒரு சௌகரியமான மன நிலைக்கு இட்டு செல்பவர்கள் ஒரு வகை , அதாவது நமது Comfort Zone எனப்படும் மிக சுகமான ஒரு மன நிலையில் எம்மை ஆறுதல் படுத்தும் வழிகாட்டிகள் இவர்களாவர்.
அடுத்த வகையான வழிகாட்டிகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் மனிதர்களாவர்.
நாம் நீண்ட நாட்களாக சுமந்து கொண்டிருக்கும் சுகமான நம்பிக்கைகளை அல்லது கோட்பாடுகளை உடைத்து நம்மை மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்கி விடுவார்கள் !
தீவிரமாக யோசிக்க வைத்துவிடுவார்கள் !
இவ்வகையான மனிதர்கள் நமது நிம்மதியையும் சிலவேளைகளில் தொலைத்துவிடுவார்கள்.
Ignorance is Bliss அதாவது அறியாமையே ஆனந்தம் என்பது போல நாம் மிகவும் சரியான பாதையில் செல்வதாக எண்ணி கொண்டிருக்கையில் இந்த Disturb வழிகாட்டிகள் எமது கனவு சொர்க்கத்தை தகர்த்து விடுவார்கள்.
கனவு சொர்க்கத்தை கலைக்கும் காரியத்தை செய்யும் அறிஞர்களை மனித சமுதாயம் அவ்வளவு நிம்மதியாக இருக்க விட்டதில்லை. 

டார்வின், கலிலியோ, கோர்ப்பனிக்கஸ், சோக்கிரட்டீஸ் மற்றும் ஏராளமான Disturb காரரை மனித குல வரலாறு கண்டிருக்கிறது , 

நமது கனவுகளை கலைக்காமல் மேலும் மேலும் அக்கனவுகளில் ஊறி நம்மை மறந்து ஒரு சுகமான நம்பிக்கையில் நம்மை செலுத்தும் அறிஞர்களையும் ஏராளாமாக நாம் கண்டுள்ளோம்.
அநேகமான சமய அல்லது சமுக தலைவர்கள் பலரும் இந்த வகையை சார்ந்தவர்கள்தான்.
இதில் யார் சரி அல்லது யார் தவறு என்பது அல்ல பிரச்சனை , 

கனவுகளை இறக்குமதி செய்யும் பலரும் தாங்கள் அந்த கனவுகளை நம்பி அதில் எதோ ஒரு புளகாங்கிதம் அடைந்து அதைபற்றி பிரசங்கம் செய்கிறார்கள் !
அல்லது தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றுகிறார்கள் .

சிந்திப்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.
சிந்திப்பது என்பது வாசிப்பதோ கேட்பதோ போன்று ஏதோ ஒருவகையில் எமது பொது அறிவை பெருக்குவது அல்ல !
நாம் பெற்றுக்கொண்ட தகவல்களில் இருந்து சுயமாகவே எமது சொந்த அபிப்பிராயங்களை அல்லது சொந்த விருப்பங்களை கண்டு பிடிப்பதுதான் சிந்திப்பது !
 அவ்வளவு சுலபம் அல்ல!