Monday, May 5, 2014

பயம் இருந்தால் அன்பு இருக்காது அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது

கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள் God With Extra Fittings

எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாத வாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை என்பதாகும்.இந்த கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை . இதனோடு கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கிறது. இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளது. பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு சாம்பாராக ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எமது தலையில் சுமக்கின்றோம். அனேகமாக எமது வாழ்வின் குழப்பங்களுக்கு இந்த சாம்பார்தனமான நம்பிக்கை கோட்பாடுகள்தான் காரணம்,

இதை விளங்கி கொள்வது இலகுவல்ல. கடவுள் என்று நாம் கருதிக்கொண்டு இருக்கும் கடவுள் ஏழைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர். ஏழைகளுக்கு மிகவும் அருகில் இருக்கிறார். பணக்காரர்களுக்கு மிகவும் தூரத்தே இருக்கிறார் என்று ஏறக்குறைய எல்லா சமயங்களும் கூறுகின்றன.
இது மிகவும் தவறான கோட்பாடாகும். சமயவாதிகள் எல்லோருமே இந்த கருத்தை கொண்டுள்ளனர். இவர்களை பின்பற்றும் மக்கள் நாம் எவ்வளவு ஏழையாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடவுளுடன் இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்.

Thursday, May 1, 2014

மந்திரம் மாயம் எல்லாம் இந்த Unconscious Mind எனப்படுவதுதான் ! புதைந்து கிடக்கும் உள் மனம் !

உங்கள் மனம் என்று நீங்கள் பொதுவாக எண்ணிக்கொண்டிருப்பது உங்களின் conscious mind ஐ தான். அதாவது உங்களின் அன்றாட வாழ்வில் நீங்கள் சுய உணர்வோடு எடுக்கும் தீர்மானங்கள், உதாரணமாக இப்போது நான் காபி குடிக்கவேண்டுமா அல்லது டீ குடிக்க வேண்டுமா? என்பது போன்ற சுய உணர்வோடு மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அல்லது எண்ணங்கள் என்று குறிப்பிடலாம்.
எங்களுக்கே தெரியாத எங்களின் மனம் என்று ஒன்று இருப்பதை பற்றி இனி பாப்போம். இதை ஆழ்மனம் அல்லது sub consicious mind என்றோ un conscious mind என்றோ அழைக்கலாம்.இந்த உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் உள் மனமானது பொதுவாக எமக்கு தெரியாத எமது உள்ளுணர்வுகளின் காப்பகம் என்று கூறலாம்.
இந்த unconscious mind இல் ரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்கள் அல்லது விருப்பங்கள் வெறுப்புக்கள் போன்றவை மிகவும் பலம்வாய்ந்த உணர்வுகளாகும். பெரும்பாலும் இவைதான் எமது வாழ்வின் உண்மையான blue print ஆகும்.
ஒருவர் எஞ்சினியர் இருந்தால் நிச்சயம் அவரின் இந்த unconscious mind இல் இதற்கான சக்தி அல்லது கரு இருந்திருக்கும் நமது வாழ்வில் இடம்பெறும் இன்பமோ துன்பமோ எல்லாமே இந்த unconscious mind என்ற அத்திவாரத்தின் மீது கட்டி எழுப்பப்பட்ட மாளிகைகள்தான்.இந்த unconscious mind இன் அதிசய பரிமாணங்களை எமது தேகாரோக்கியத்தில் மிக தெளிவாக காணலாம். சகல விதமான நோய்களும் அல்லது ஆரோக்கியமும் இதில் இருந்தே உருவாகிறது.இதை கண்டுபிடிப்பதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை மிகத்தெளிவாக கண்டு பிடிக்காலாம். எவரின் unconscious mind இல் நோய்களை பற்றிய பயம் அல்லது நினைப்புகள் அதிகம் இருக்கின்றதோ அவர்கள் அந்த நோய்களை தம்மை நோக்கி ஈர்த்துவிடுவார்கள். அதிகம் நோய் வாய்ப்படுபவர்கள் எல்லாம் அனேகமாக நோய்களை பற்றி சிந்திப்பவர்களாக இருப்பதை அவதானிக்க முடியும்.