Tuesday, April 22, 2014

ஒரிஜினல் கேள்விகளும் இல்லை ஒரிஜினல் பதில்களும் இல்லை !

கடவுள் இருக்கிறாரா அல்லது இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குள்
செல்வது எந்த வகையிலும் ஈசியான சமாசாரம் அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களும் மறுப்பாளர்களும் தங்களுக்கு தெரிந்ததாக தாங்கள் எண்ணிக்கொண்டு இருக்கும் கருத்துக்களை மிக இலகுவில் அள்ளி வீசிவிடுவர்.
இந்த பதில்கள் எல்லாமே ஒரு இரவல் பதில்கள்தான் என்பது அடியேனின் தாழ்மையான அல்லது மிகவும் கர்வமான அபிப்பிராயமாகும் .
யாரோ சொல்லிகொடுத்த அல்லது எங்கோ படித்த கருத்துக்களை தங்கள் சுய கருத்துக்களாக நம்பி கிளிப்பிள்ளை மாதிரி ஒப்படைத்து திருப்தி அடைவது காலா காலமாக நடக்கிறது .
உண்மை என்ன ?
அது என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்பதைவிட.
 அது என்று எதை நாம் நினைகின்றோம் என்பது மிகவும் முக்கியமானது , எமது கேள்வி எப்போது ஒரு ஒரிஜினல் கேள்வியாக இருக்கிறதோ அப்போதே உண்மையான பதிலை அறிவது இலகு வாகிவிடும் . அது இருக்கிறதா இல்லையா என்பதை விட அது என்று எதை நாம் நினைக்கிறோம் என்பது முக்கியம் !   
பொதுவாக கடவுள்  என்று நாம் கருதுவதாக பாவனை பண்ணும் விடயம் ஒரு localized focal point  நாம் சகல பொருட்களுக்கும் கொடுக்கப்படும் பெயர்கள் போன்ற ஒரு அடையாள குறியீடாக பல பெயர்களை வைத்து அழைத்துகொள்கிறோம். இந்த அழைப்புக்குறியீடு நாம் ஏதாவது ஒன்றை குறிப்பிட பயன்படும் வார்த்தை அல்லது கருத்து ஆகும்.

இந்த வித மான அர்த்தத்தில் கடவுள் என்ற சமாசாரம் இருப்பதாக கருதிகொண்டால் வாழ்க்கை முழுதும் நர்சரியில் இருக்க வேண்டியதே,,அதைதான் மிகவும் சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறோமே , அதை தாண்டி கொஞ்சம் நகர்ந்து பார்க்க விரும்பு பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்
இந்த இடத்தில் ஜே . கிரிஷ்ணமூர்த்தி , யு ஜி, கிருஷ்ணமுர்த்தி மற்றும் மேலை நாட்டு  ஞானிகளான  குருஜீப் நீட்சே போன்றவர்களை குறிப்பிடவேண்டிய அவசியம் சற்று இருக்கிறது , வேறு பலரும் கூட பாரம்பரிய சமயவாதிகள் போலல்லாது  கொஞ்சம் யதார்த்தமான பாணியில் விஷயங்களை விளக்க முயற்சித்திருக்கிறார்கள் ,
விளக்க மிகவும் வில்லங்கமான ஒரு விடயத்தை விளக்க  கொழும்புத்துறை யோகர்சுவாமி கூட பல தடவை கொஞ்சம் தொட்டு தொட்டு பேசி இருக்கிறார்,
யு.ஜி,கிரிஷ்ணமுர்த்தி  என்ற சுய சிந்தனையாளர் பலதடைகளில் பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார் , அவரின் சொற்களில் இருக்கும் காரம் பலரையும் ஓட ஓட விரட்டி விட்டது, அவரின் கருத்துக்களை படித்த ஆரம்ப காலங்களில் அவரை ஒரு முழு பைத்திய காரனாகவே எண்ணி இருந்தேன் , இப்போதும் கூட சில வேளைகளில் அப்படி எண்ணுவதுண்டு,
அவர் கடவுள் ஆத்மா மோக்ஷம் குண்டலினி  மற்றும் ஞானம் போன்ற எதுவுமே உண்மை இல்லை . எல்லாம் வேறு வார்த்தை விளையாட்டு தான் நாம் இறந்தால் நடப்பது ஒன்றுமேயில்லை இறந்தால் இறப்பு அவ்வளவுதான் , நாம் நம்பு எதுவுமே உண்மை இல்லை என்பது போன்ற அவரது கருத்துக்கள் வாழ்வை பற்றிய அல்லது ஆத்மாவின் நிரந்தரத்துவம் பற்றிய  கோட்பாடுகள் எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து விடுவதால் அவர் ஒரு பயமுறுத்தும் பைத்தியகாரன் என்ற தோற்றத்தை தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டுவிட்டார் ,
அவரை பற்றி மக்கள் பொதுவாக கொண்டிருக்கும் கருத்துக்களையே நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
ஆனால் அவரை பற்றிய எனது கருத்துக்கள் தற்போது மேற்கண்டவை அல்ல ,
அதற்கு காரணம் எனது மனதிற்கு அல்லது அறிவுக்கு தெரிந்த சில அனுபவங்கள் எனலாம்
கடவுள் என்று பலராலும் குறிப்பிட படுகின்ற விடயத்தை பற்றி எனக்கு ஒரு சுய அப்பிபிராயம் ஏற்பட்டுள்ளதை இங்கு குறிப்பிட எண்ணி உள்ளேன்,
இதுவரையில் நான் சொல்லி வருவது போல இலகுவாக இனி வரும் செய்திகளை சொல்ல முடியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு,  ஏனெனில் நாம் உபயோகிக்கும் எந்த மொழியும் சொல்லும் perfect ஆனவை அல்ல . அல்லது மொழிகளின் மீது எனக்கு இருக்கின்ற ஆழுமை போதியளவாக இல்லாமல் இருக்கவும் கூடும் ,
தகுதியற்ற ஒரு கருவியை கொண்டு  மிக அற்புதமான சிலையொன்ற செய்யும் அதீத முயற்சியை நான் செய்கிறேனோ என்றும் தோன்றுகிறது , இருந்தாலும் இந்த முயற்சியை செய்வது எனக்கு உகந்ததாக படுகிறது,
எமக்கு தேவை என்ற ஒன்று இருக்கும் வரைதான் இந்த வாழ்கை அல்லது இந்த பிறவி என்ற ஒன்று இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ,
எதையும் எண்ணுகின்ற அதே கணப்பொழுதில் நாமே அதுவாக மாறிவிடும் அற்புதத்தை பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?
எமது மனம் என்ற ஒன்று ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான் , மிக அழகான ஏற்பாடுதான் ,
எதையெல்லாம் பற்றி எண்ணிக்கொண்டே வருகிறோமோ அவைகளாகவே நாம் மாறிக்கொண்டே வந்தால் எதுதான் நமக்கு தேவை ?
எதுவும் தேவை இல்லை .
நாம் வேறு இந்த பிரபஞ்சம் வேறு என்ற எண்ணமே தோன்றாது ,
எமக்குள்ளேயே இந்த  பிரபஞ்ச இயக்கமும் உருவாகிகொண்டிருக்கும் அற்புதம் என்றால்  என்ன ?
எமது இந்த சிறிய அற்புதமான மனம் என்ற கருவிதான் முதல் platform.
இந்த மனம் என்ற பிளாட்போர்ம் தனது ஆரம்ப கடமை நிறைவேறிய பின்பு மாயமாகிவிடும் .
அதன் பின் நாம் யார் ? கடவுள் யார் ?  இந்த பிரபஞ்சம் என்றால் அது எது ?
எமது உயிர் என்றால் என்ன  போன்ற கேள்விகளுக்கு பதில் தானேகவே வந்துவிடும் .
நான் இதுவரை சொல்லியதில் இருந்து உங்களுக்கு ஏதாவது விளங்கி இருந்தால் நல்லது அப்படி ஏதும் விளங்காவிட்டாலு நல்லது . நீங்களாகவே விளங்கி கொள்வது என்பது தான் Perfect Trick.
மீண்டும் மீண்டும் இந்த கடவுள் மேட்டர் பற்றி நீங்கள் அறிய ஆவலாக இருந்தால் பேசுவோம்

No comments:

Post a Comment