

பிறர்
நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு
சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும்
பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,

அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி
விடுகிறது.நம்மை அறியாமலேயே நாம் எமது சுய புத்தியை அல்லது சுய
விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்
ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.