கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள் God With Extra Fittings
எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாத வாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை என்பதாகும்.இந்த கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை . இதனோடு கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கிறது. இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளது.
பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு சாம்பாராக ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எமது தலையில் சுமக்கின்றோம்.
அனேகமாக எமது வாழ்வின் குழப்பங்களுக்கு இந்த சாம்பார்தனமான நம்பிக்கை கோட்பாடுகள்தான் காரணம்,இதை விளங்கி கொள்வது இலகுவல்ல. கடவுள் என்று நாம் கருதிக்கொண்டு இருக்கும் கடவுள் ஏழைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர். ஏழைகளுக்கு மிகவும் அருகில் இருக்கிறார். பணக்காரர்களுக்கு மிகவும் தூரத்தே இருக்கிறார் என்று ஏறக்குறைய எல்லா சமயங்களும் கூறுகின்றன.
இது மிகவும் தவறான கோட்பாடாகும். சமயவாதிகள் எல்லோருமே இந்த கருத்தை கொண்டுள்ளனர். இவர்களை பின்பற்றும் மக்கள் நாம் எவ்வளவு ஏழையாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடவுளுடன் இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்.