
எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது
சுபாவமாகும் . தவிர்க்க முடியாத நேரங்களில் மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும்.
மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும் .
நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம் . அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது.
அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது
பயத்தை வெளியே காட்டி கொள்ளாமல் நடிப்பதில் மிக பெரிய பரிணாம வளர்ச்சியை
அடைந்து விட்டோம்.
எமது மனதில் சதா தோன்றும் சிறு சிறு சலனங்களும் கூட பயத்துடன் கலந்தே வருகிறது.
நாம் என்னதான் அறிவு பண்பு என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும். நாம் என்னவோ எல்லாவற்றிகும் பயபடுகிறோம்.
இந்த FEAR FACTOR எம்மை சரியான பாதையில் பயணிக்க விடாது,
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல.
இது ஒரு முக்கியமான காந்தம் போன்ற உணர்வு. அடுத்த முக்கியமான உணர்வு அன்பு ஆகும் .
நமது சகல எண்ணங்களும் கருமங்களும் பேச்சுக்களும் ஒன்றில் அன்பின்
அடிப்படையானதாக இருக்கும் , அல்லது பயத்தின் பால் பட்டதாக இருக்கும்.
இவை இரண்டில் ஏதாவது ஒரு உணர்வின் அடிப்படையிலே நமது சகல காரியங்களும் எண்ணங்களும் உருவாகுகின்றன.
அன்புக்கும் பயத்திற்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தம் எமது ஒவ்வொரு உணர்ச்சியிலும் நடை பெறுகிறது.
எப்பொழுதெல்லாம் அன்பு வெல்கிறதோ அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக வெற்றிகரமாக வாழ்கிறோம்.
ஆனால் துரதிஷ்ட வசமாக அன்பு அதிகம் வெல்வதில்லை .
பெருவாரியான தருணங்களில் எமது பயம் தான் வெல்கிறது. ஏனெனில் நாம் வாழும்
இன்றைய உலகம் பெரும்பாலும் பயத்தின் அடிப்படையிலேயே கட்டி
எழுப்பட்டிருக்கிறது.
நாம் அன்பு காதல் பாசம் நேசம் என்றெல்லாம் வெளிப்படுத்திகொள்ளும்
பலதருணங்களில் உண்மையில் அந்த அன்பின் முகமூடியை அணிந்து கொண்டு எமது
பயத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறோம்.